2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

3 வருடங்களுக்கு முன்னர் விதிக்கப்பட்ட தண்டனை மீண்டும் அமுல்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 24 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

மூன்று வருடங்களுக்கு முன்னர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட ஒரு வருட சிறை தண்டனை, செவ்வாய்க்கிழமை அமுல்படுத்தப்பட்ட சம்பவமொன்று சவகச்சேரி நீதவான் நீமிமன்றத்தில் இடம்பெற்றது.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர், பொலிஸ் உத்தியோகஸ்தர் எனக்கூறி பலரிடமும் பணம் பெற்ற சந்தேகநபர் ஒருவர் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததைத் தொடர்ந்து சந்தேகநபர் தலைமறைவாகியிருந்தார். இதனையடுத்து, பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

எதிராளி இல்லாத நிலையில் மன்றில் வழக்கு விசாரிக்கப்பட்டு, எதிராளிக்கு ஒரு வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் எதிராளி நேற்று செவ்வாய்க்கிழமை (23) நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதன்போது, எதிராளியின் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்த நீதவான், மூன்று வருடங்களுக்கு முன்னர் விதிக்கப்பட்ட தண்டனையை மீண்டும் அமுல்ப்படுத்தி, தலைமறைவாகியிருந்த குற்றத்திற்காக 1,500 ரூபாய் தண்டத்தையும் விதித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .