2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

3 மாகாண அமைச்சர்கள் கடமைகளை பொறுப்பேற்பு

Super User   / 2013 ஒக்டோபர் 14 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வட மாகாண சபையின் நான்கு அமைச்சர்களில் மூன்று அமைச்சர்கள் கடமைகளை இன்று திங்கட்கிழமை பொறுப்பேற்றுள்ளனர்.

மாகாண விவசாய மற்றும் கால்நடை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், மாகாண கல்வி மற்றும் கலாசார அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா மற்றும் மாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோரே அமைச்சு பொறுப்புக்களை பொறுப்பேற்றுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள மாகாண அமைச்சுகளிலேயே இவர்கள் கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர். இந்த நிகழ்வுகளில் அந்தந்த துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .