Janu / 2024 ஏப்ரல் 30 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கி வந்த மூன்று உணவகங்கள் நீதிமன்ற உத்தரவில் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகரின் திடீர் பரிசோதனையின் போது , திருநெல்வேலி பகுதியில் மூன்று உணவகங்கள் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கி வந்துள்ளன. அது தொடர்பில் சுகாதார பரிசோதகரால் உணவக உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டு , குறைகளை சீர் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது .
மறுபரிசோதனைக்காக திங்கட்கிழமை (29) குறித்த உணவகத்திற்கு பொது சுகாதார பரிசோதகர் சென்ற போது குறைகள் சீர் செய்யப்படாததையடுத்து , மூன்று உணவக உரிமையாளர்களுக்கு எதிராக யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது உரிமையாளர்கள் குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளதுடன் , அவர்களுக்கு 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மன்று , உணவாக சுகாதார சீர்கேடுகளை நிவர்த்தி செய்யும் வரையில் உணவகங்களுக்கு சீல் வைக்கமாறு உத்தரவிட்டுள்ளது.
எம்.றொசாந்த்
22 minute ago
33 minute ago
39 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
33 minute ago
39 minute ago
54 minute ago