Freelancer / 2023 செப்டெம்பர் 18 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட்டுக்கோட்டை - மூளாய் பகுதியில் 5 பிள்ளைகளின் தந்தையான செ.மகேந்திரம் (வயது 44) என்ற நபர் நேற்றிரவு திடீரென உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் குடும்பஸ்தர் மயக்கமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும் அவர் தொடர்ந்து மயக்க நிலையிலேயே இருந்துள்ளார்.
அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் கீழே விழுந்தார் எனவும் அதற்கு பின்னர் வழமை போல சாதாரண நிலையில் இருந்ததாக அவரது மனைவியால் வைத்தியசாலையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவரது மூளையில் இரத்தக் கசிவு இருப்பதாக தெரிவித்து, சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். R
23 minute ago
27 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
27 minute ago
1 hours ago
1 hours ago