Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2022 ஜனவரி 20 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் மூத்த போராளி மாவீரன் கனியூட் மாசில்லாமணி டயஸின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மன்னாரில் அமைந்துள்ள ரெலோ கட்சியின் அலுவலகத்தில் நேற்று (19) நடைபெற்றது.
இந்நினைவேந்தல் நிகழ்வு, மன்னார் பிரதேச சபையின் உறுப்பினரும், ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளருமான ஏ.ரி.மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது அன்னாரது உருவ படத்துக்கு மலர் தூவி, சுடரேற்றி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
கனியூட் மாசில்லாமணி டயஸின் புதல்வன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ், ரெலோ கட்சியின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இந்தியா நோக்கிய கடல் பயணத்தின் போது, கடற்படையினருடனான மோதலின் போது கனியூட் மாசில்லாமணி டயஸ் 19-01-1986 அன்று உயிரிழந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago
44 minute ago
1 hours ago