2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

400 கிலோமீற்றர் வரையிலான செப்பனிடுவது தொடர்பில் ஆய்வு

Kogilavani   / 2014 ஜூன் 16 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


துணுக்காய் நகர் பகுதியில் 400 கிலோமீற்றர் வரையிலான வீதியினை செப்பனிடுவது தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தாம் கவனம் செலுத்தி ஆராயவுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திங்கட்கிழமை(16) தெரிவித்தார்.

வெள்ளாங்குளம் வீதி புனரமைப்பு தொடர்பில் வர்த்தகர்களும்,  பொதுமக்களும் எதிர்நோக்கி வருகின்ற இடர்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்ந்தார்.

வர்த்தக நிலையங்களுக்கு முன்பாகவுள்ள பிரதான வீதியானது வர்த்தக நிலையங்களுக்கு உயரமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள காரணத்தினால் வர்த்தகர்களும் பொதுமக்களும் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக ஏற்கனவே அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடமும், பெருந்தெருக்கள் அமைச்சோடும் கலந்துரையாடியதன் பிரகாரம் குறித்த அமைச்சின் உயரதிகாரிகள் திங்கட்கிழமை (16) தினம் துணுக்காய் பகுதிக்கு வருகை தந்தனர்.

மேற்படி விடயம் தொடர்பிலான கலந்துரையாடல் துணுக்காய் பிரதேச செயலகத்திலும், வணிகர் சங்க பணிமனையிலும் திங்கட்கிழமை (16)  நடைபெற்றது.

இதன்போதே இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, அந்த அதிகாரிகள் மத்தியில் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் எதிர்நோக்கி வரும் இடர்பாடுகளை அமைச்சர்     தெளிவுப்படுத்தினார்.

இதனடிப்படையில் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் பெருந்தெருக்கள் அதிகார சபை ஆகிய இருதரப்பும் பொது இணக்கப்பாட்டுடன் தீர்வினைக் காண முன்வருமாறு அமைச்சர்; கேட்டுக் கொண்டார்.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பாக தாம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களது கவனத்திற்கு மீளவும் தெரியப்படுத்தி அதன்பிரகாரம் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
இதன்போது துணுக்காய் பிரதேச செயலர் குணபாலன், அமைச்சரின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் ஜெயராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .