2025 ஜூலை 09, புதன்கிழமை

46 வர்த்தகர்களுக்கு அபராதம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 02 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

யாழ். மாவட்டத்திலுள்ள 46 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக யாழ். மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களால் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 2 இலட்சத்து 8500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் இணைப்பாளர் தனசேகரன் வசந்தசேகரம் செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தனர்.

பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் கடந்த ஓகஸ்ட் மாதம் யாழ்.மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போது, நிறை குறைந்த பாண் விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, பொருட்களின் விலையை காட்சிப்படுத்தாமை மற்றும் அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்தமை போன்ற குற்றங்களை செய்த 46 வர்த்தகர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

தொடர்ந்து, மேற்படி வர்த்தகர்களிற்கு எதிராக அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதன்போது, மேற்படி வர்த்தகர்கள் அனைவரும் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து, நீதிமன்றங்களால் மேற்படி தொகை அபராதமாக விதிக்கப்பட்டதாக வசந்தசேகரம் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .