2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

5 வயது சிறுமி மீது 67 வயது முதியவர் துஷ்பிரயோகம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 18 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா, ற.றஜீவன்

யாழ்.குருநகர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 67 வயது முதியவர் ஒருவரை புதன்கிழமை (17) மாலை கைது செய்ததாக யாழ்ப்பாண பொலிஸார் வியாழக்கிழமை (18) தெரிவித்தனர்.

சிறுமியின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் மேற்படி முதியவர், சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக சிறுமியின் பெற்றோர்களால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (16) முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகநபரான முதியவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .