2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

6 இந்திய மீனவர்களும் யாழ். சிறையில் அடைப்பு

Freelancer   / 2022 பெப்ரவரி 19 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களையும் மார்ச் மாதம் 4ஆம் திகதி வரை சிறையில் அடைக்க ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 நேற்றிரவு காரைநகர் - கோவளம் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட இலங்கைக் கடற்படையினர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு படகையும் அதில் இருந்த 6 மீனவர்களையும் கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது வழக்கை விசாரித்த நீதிவான் கஜநிதிபாலன் மார்ச் மாதம் 4ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து மீனவர்கள் 6 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .