Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜனவரி 24 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்
இலங்கையில் தடை செய்யப்பட்ட பெருமளவிலான எதனோல் போதைப் பொருள் பாரவூர்தியில் கடத்திச் செல்லப்பட்ட போது சுன்னாகம் பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் நேற்று (23) இரவு கைப்பற்றப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலினடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையிலேயே இப்போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, 21 லீற்றர் கொள்ளளவைக் கொண்ட 372 கொள்கலனிலிருந்து 7420 லீற்றர் எதனோல் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பாராவூர்தியுடன் கைப்பற்றப்பட்ட எதனோல் போதைப் பொருளை சுன்னாகம் பொலிஸாரிடம் இன்று (24) விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னடுத்து வருகின்ற சுன்னாகம் பொலிஸார் இப் போதைப்பொருளையும் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 May 2025
18 May 2025