2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அணில் பிடிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு

எம். றொசாந்த்   / 2018 ஒக்டோபர் 15 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அணிலைப்பிடிப்பதுக்காக ஓடிச்சென்ற சிறுவன் கிணற்றினுள் விழுந்து உயிரிழந்த சம்பவம் யாழ். ஒஸ்மானியா வீதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ்.ஒஸ்மானியா வீதியை சேர்ந்த அமீர் முகமத் அருஸ் (வயது 08) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான்.

குறித்த சிறுவன் நேற்று (14) தனது வீட்டுக்கு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளான். அங்கு அணில் ஒன்றினை கண்டு அதனை பிடிப்பதுக்கு துரத்திச் சென்றுள்ளான். அதன்போது வீட்டின் பின்புறமாக இருந்த கிணற்றினுள் தவறி விழுந்துள்ளான்.

அணிலை துரத்தி சென்ற சிறுவனை நீண்ட நேரமாகியும் காணாததால் உறவினர்கள் சிறுவனை தேடிய போது, சிறுவன் கிணற்றினுள் விழுந்துள்ளதை அவதானித்து, சிறுவனை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

சிறுவனின் உடலை பரிசோதித்த வைத்தியர் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X