2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’அதிகாரம் இல்லை என தெரிந்தும் ஏமாற்றுகிறார்கள்’

Niroshini   / 2021 ஜூலை 26 , பி.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

மாகாண சபையில் தீர்வு விடயம் தொடர்பில் எந்த ஓர்  அதிகாரமும் இல்லை என தெரிந்து கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள் என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற பாடசாலைகள் மத்திய அரசாங்கம் கையகப்படுத்தல்  தொடர்பில் அதாவது தேசிய பாடசாலைகளாக மாற்றுதல் தொடர்பில்  அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றன எனவும் வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற வைத்தியசாலைகள் மத்திய அரசின் ஆளுகைக்கு உட்படுத்தி தொடர்பிலும் பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன எனவும் கூறினார்.

தமிழருக்கு தீர்வென உருவாக்கப்பட்டது தான்  மாகாண சபை எனத் தெரிவித்த அவர், ஆனால் தமிழர்களாகிய நாம் அந்த கட்டமைப்பில் நடக்கின்ற மத்திய அரசின் தலையீட்டு   விடயத்திலும் அதாவது வடக்கு, கிழக்கில் வாழும் மக்களின் விருப்பங்களுக்கு அமைவாக கட்டுப்படுத்த முடியாத ஒரு நிலையில் ஒப்பாரி விடுகின்ற நிலைமைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம் என்றும் கூறினார்.

"மாகாண சபையானது  இனப் பிரச்சினைக்கான இறுதி தீர்வென கொண்டுவரப்பட்டது.  ஆயுதமேந்திய பல கட்சிகள் ஆயுதங்களை கைவிட்டு  வந்ததும் இந்த மாகாண சபை முறையை நம்பித்தான். ஆனால், ஒரு மாகாணத்தில் இருக்கின்ற ஒரு முதலமைச்சர் தனக்கு விரும்புகின்றவர்கள் செயலாளரை கூட நியமிக்க முடியாத அளவுக்கு நிலைமை இருக்கின்றது.

"சட்டத்தில் அதிகாரத்தை கொடுக்கப்பட்டுள்ளது  என்றால் அதனை அரசாங்கம்  கட்டுப்படுத்த முடியாது. அதற்கு வழக்கு தாக்கல் செய்ய முடியும். அரசாங்கத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி எந்த பிரயோசனமும் இல்லை. சட்டத்துக்கு எதிராக அரசாங்கம் செயற்படுமாக இருந்தால் நீதிமன்றத்தை நாட முடியும்.

"மாகாண சபை முறையில் சட்ட ரீதியாகவே மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற சபை அல்லது முதலமைச்சருக்கோ அல்லது அமைச்சரவைக்கோ எந்தவிதமான அதிகாரமும் கிடையாது இதுதான் உண்மையான விடயம். மாகாண சபை சம்பந்தமான  அனைத்துமே ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்ற ஆளுநருக்கு  மட்டும்தான் அந்த அதிகாரம் உள்ளது" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .