Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Niroshini / 2021 செப்டெம்பர் 30 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். தில்லைநாதன்
தொண்டைமானாறு - சந்நிதியான் ஆச்சிரமத்தால் வடமராட்சி பருத்தித்துறை - கொடிகாமம் தனியார் பஸ் சேவைச் சங்கம் சார்ந்த சாரதி, நடத்துனர்களின் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
கொவிட் - 19 இடர்கால நிவாரண உதவித் திட்டத்துக்கு அமைவாக பருத்தித்துறை, கரவெட்டி பிரதேச செயலாளர்களின் நிர்வாக ஆளுகைக்கு உட்பட்ட வடமராட்சி தனியார் பஸ் சேவைச் சங்கம் பருத்தித்துறை - கொடிகாமம் சார்ந்த சாரதிகள், நடத்துனர்களைச் சேரந்த 35 குடும்பங்களுக்கு வழங்குவதற்காக 75,000 ரூபாய் பெறுமதியான அத்தியவசிய உணவுப் பொருள்களான அரிசி, மா, சீனி, பருப்பு உள்ளடங்கலாக வழங்கப்பட்டன.
வணக்கத்துக்குரிய மோகனதாஸ் சுவாமிகள் அவர்களால், சந்நிதியான் ஆச்சிரமத்தில் வைத்து வடமராட்சி - பஸ் சேவைச்சங்கம் 759 பாதை இலக்க நிர்வாகிகளிடம், நேற்று முன்தினம் (28), இவை கையளிக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago