Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 மார்ச் 28 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஸன்
“யுத்தத்தின் போது சட்டத்துக்கு புறம்பான வகையில், குற்றமிழைத்தவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோருகின்றோமே தவிர, இராணுவத்தினர் அனைவரையும் தண்டிக்க வேண்டுமென்று நாம் எங்குமே கேட்கவில்லை” என, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“போர்க் குற்றங்களுக்கு தண்டனை வழங்க வேண்டுமென்று நீங்கள் கோருகின்ற போது, நாட்டைப் பாதுகாத்த போர் வீரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று, முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்காக, உங்கள் முன்னிலையிலேயே கூறியிருக்கின்றார். இது தொடர்பில் உங்களின் கருத்து என்ன?” என, எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “யாராக இருந்தாலும் அரசியல்வாதிகள் என்று சொல்லுகின்ற போது, அவர்கள் பல கோணங்களில் இருந்து தங்களுடைய அரசியல் நன்மைகளையும் கருதி பல கருத்துக்களையும் வெளியிடுவார்கள். அதற்கமைய சந்திரிக்கா குறிப்பிட்டதும் புதுமையான ஒன்றல்ல. ஏனெனில், எங்களுடைய ஜனாதிபதியும் அதைத் தான் குறிப்பிட்டிருக்கின்றார்.
இந்நிலையில், போரிலே வெற்றி கொண்ட எங்களுடைய போர் வீரர்களை இந்த அரசாங்கம் தண்டிக்கப்பார்க்கின்றது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஐபக்ஷவும் குறிப்பிட்டிருந்தார் என்று ஊடகமொன்று என்னிடம் கேட்ட போது அதுவொரு பிழையான கருத்து என்றும்; தெரிவித்து இருக்கின்றேன்.
அதாவது போரிலே வென்றவர்களைத் தண்டிப்பதல்ல. போரிலே வெல்லும் போதும் யுத்தத்துக்கு புறம்பான விதத்திலே குற்றங்களை இழைத்தவர்களைத் தான் சர்வதேசமும் கேட்கின்றதே தவிர போர்வீரர்கள் எல்லோரும் குற்றவாளிகள் என்று எங்குமே எவருமே சொல்லவில்லை.
தனிப்பட்ட ஒருவர் அல்லது தனிப்பட்ட சிலர், சட்டத்துக்கு புறம்பான முறையிலே போர்காலத்தில் அல்லது போர் முடியும் காலத்தில் செய்திருந்தால் அவர்களை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதைத்தான் நான் சந்திரிக்கா அம்மையாருக்கும் கூறுவேன். அவரும் நானும் கலந்து கொண்டிருந்த அந்த நிகழ்வில், அங்கு நான் கடைசியாக உரையாற்றியிருந்தால் இதனை அன்றே அவருக்கு முன்னால் கூறியிருப்பேன்” என முதலமைச்சர் மேலும் கூறினார்.
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago