2025 மே 13, செவ்வாய்க்கிழமை

அனலைதீவு, காரைநகரில் முடக்கம் நீக்கம்

Niroshini   / 2020 ஒக்டோபர் 11 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

அனலைதீவு மற்றும் காரைநகர் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த தற்காலிகமாக முடக்கம், நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக, யாழ்.  மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.

அனலைதீவு பகுதியில் கடந்த இரு நாள்களுக்கு முன்னர், கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் கடற்படையினரால் இருவர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, அனலைதீவு மற்றும் காரைநகர் பகுதிகள் தற்காலிகமாக முடக்கம் செய்யப்பட்டன.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது சுகாதாரப் பிரிவினரால் உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து,  அப்பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த தற்காலிகமாக முடக்கம் நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X