Niroshini / 2022 ஜனவரி 09 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
அச்சுவேலி பகுதியில் இருந்து, அனுமதிப்பத்திரமின்றி மாடுகளை ஏற்றிச் சென்ற ஒருவர், கோண்டாவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக, கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் ஐந்து சந்திப் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (8) மாலை, வீதி ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த வாகனத்தை சோதனையிட்ட போது, மாடுகளை ஏற்றி சென்றமை கண்டுபிடிக்கப்பட்டது.
அத்துடன், மாடுகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரம் சாரதியிடம் இருக்கவில்லை எனவும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, வாகன சாரதி கைது செய்யப்பட்டார்.
16 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago