Editorial / 2018 ஒக்டோபர் 03 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், சுமார் 27,000 அன்னாசிப் பழக் கன்றுகளை, பயனாளிகளுக்கு விநியோகிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக விவசாயப் பிரிவு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், கடந்த வருடம் அன்னாசிப் பழ பயிர்ச்செய்கை பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்பட்டது.
அதனடிப்படையில், நடைபெற்ற கண்காணிப்புகளுக்கமைய, சாவக்கச்சேரி - கெற்பேலி பிரதேசத்தில், விவசாயிகள் அன்னாசி பயிர்ச்செய்கையில் ஆர்வம் காட்டியுள்ளனர். இங்கு விளைச்சலும் சிறப்பாக அமைந்திருந்தது.
இதையடுத்து, 41 பயனாளிகளுக்கு, 27,000 அன்னாசி கன்றுகளை வழங்குவதற்கு, தேசிய நல்லிணக்க அமைச்சு நிதி ஒதுக்கியுள்ளதாக, அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
15 minute ago
27 minute ago
32 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
27 minute ago
32 minute ago
40 minute ago