2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

அமைச்சின் செயலாளர்கள் சபை அமர்வில் கலந்துகொள்ள வேண்டும்

Gavitha   / 2015 நவம்பர் 20 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

வடமாகாண சபை அமர்வு நடைபெறும் தினத்தில் வடமாகாண பிரதம செயலாளர், அமைச்சின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் நிச்சயமாக கலந்து கொள்ளவேண்டும் என வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் பணித்துள்ளார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (19) நடைபெற்ற போதே,  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்றைய சபை அமர்வில் இரு அமைச்சின் செயலாளர்கள் மாத்திரமே கலந்து கொண்டனர். அதனையடுத்தே இவ்வாறு அவைத்தலைவர் தெரிவித்தார்.

மாகாண சபை அமர்வுகள் நடைபெறும் தினங்களிலோ அல்லது அதற்கு முந்திய தினத்திலோ அமைச்சுக்கள் வேறெந்த நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்யவேண்டாம் என்றும் சகல அமைச்சின் செயலாளர்களும் பிரதம செயலாளர் திணைக்கள தலைவர்களும் மாகாண சபை அமர்வில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .