Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 09 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
அரசிலுக்கு வரும் அவா எனக்கு இல்லையெனத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், அவ்வாறு அரசியலில் முதலமைச்சராக அல்லது நாடாளுமன்ற உறுப்பினராக வர வேண்டுமென்று எண்ணமும் எனக்கில்லை எனவும் கூறினார்.
யாழிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின் போது எழுப்பபட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
“நான் ஓர் அரச நிர்வாகியாக மட்டுமே இருக்கின்றேன். அதன் நிமித்தம் எனக்கு வழங்கப்பட்ட பதவியினூடாக மக்களுக்கான எனது கடமையை செய்து வருகின்றேன். அதிலும் எனது கடமையின் ஆரம்பத்தில் தான் இருக்கின்றேன். ஆகையால் இயன்றவரை மக்களுக்கபான எனது சேவைகளை சிறந்த முறையில் செய்து கொடுக்க உழைத்து வருகின்றேன்” என்றார்.
ஆகவே, நான் அரசியலில் வரப்போவதில்லையெனவும் அதற்கான எண்ணமும் எனக்கில்லையெனவும், அவர் கூறினார்.
ஆனாலும் தான் தற்பொது வகிக்கும் பதவியில் வேறு யாராவது வருவதற்காக கூட தான் அவ்வாறு அரசியலில் வரப் போவதாகச் சொல்லலாமெனத் தெரிவித்த அவர், அதைப் பற்றி தனக்குத் தெரியாதெனவும் கூறினார்.
ஏனெனில் உண்மையிலையே அவ்வாறாக அரசியலில் ஈடுபடும் அவா எனக்கில்லையெனக் கூறினார்.
14 minute ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
2 hours ago
5 hours ago