Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் நகரில் சைக்கிளில் பயணித்த இளம் பெண்ணிடமிருந்து பெறுமதி வாய்ந்த அலைபேசியுடன் கைப்பையைப் பறித்துச் சென்ற நபர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட அலைபேசி, கைப்பை என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த வழிப்பறிக் கொள்ளைச் சம்பவம் நேற்று முன்தினம் (2) இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் பஸ்தியான் சந்திக்கு அருகாமையில் பட்டப்பகலில் இளம் பெண் துவிச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார். அவரின் சைக்கிள் கூடைக்குள்ளிருந்த கைப்பையை மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறிக் கொள்ளையர் ஒருவர் அபகரித்துத் தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. குருநகர் பூங்கா வீதியைச் சேர்ந்த ஒருவர் மீது சந்தேகம் கொண்ட புலனாய்வுப் பிரிவினர், அவரைக் கண்காணித்துள்ளனர்.
இந்த நிலையில் கொள்ளையிட்ட அலைபேசியின் லொக்கை எடுத்துத் தருமாறு அந்த நபர் யாழ்ப்பாணம் நகரில் உள்ள அலைபேசித் திருத்தகத்தில் வழங்கியுள்ளார்.
அந்த அலைபேசியை பொலிஸார் கைப்பற்றி ஆராய்ந்த போது, குறித்த இளம் பெண்ணிடம் அபகரித்த அலைபேசி என்பது உறுதி செய்யப்பட்டது.
அதனையடுத்து அந்த நபரைக் கைது செய்த பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
“போதைப்பொருள் ஒரு முள்ளு 3,500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதனை வாங்குவதற்கு பணம் கிடைக்காததால், வீதியில் சென்ற பெண்ணிடம் அலைபேசியைக் கொள்ளையிடுவதற்காக அவரது கைப்பையைப் பறித்துச் சென்றேன்” என்று சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .