Niroshini / 2021 ஜூலை 15 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
வல்வெட்டித்துறை - வடமேற்கு (ஜே388) கிராம அலுவலகர் பிரிவுக்குட்பட்ட ஆதிகோவிலடி பகுதி, தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் கடந்த இரண்டு நாள்களில் 48 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டது.
அதனையடுத்து, பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியால் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளருக்கும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிபாளருக்கும் நேற்றிரவு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய, அப்பகுதி உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தக் கிராமத்தில் 310 குடும்பங்களைச் சேர்ந்த 940 பேர் வசிக்கின்றனர்.
இதேவேளை, பருத்தித்துறை முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் குறுக்குத் தெருக்களிலும் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
30 minute ago
35 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
35 minute ago
4 hours ago