Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ். குடாநாட்டில் வன்முறைகள் அதிகரித்துள்ளமை தொடர்பிலும் போதைவஸ்து மற்றும் கலாசார சீரழிவுகளை எதிர்காலத்தில் அதிகரிக்காது வண்ணம் பாதுகாத்துக் கொள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயும் விசேட கூட்டம், வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (03) ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, யாழ் மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், இளைப்பாறிய யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், மதுவரித்திணைக்கள அதிகாரிகள் சர்வமதத் தலைவர்கள் புத்திஜீவிகள் உள்ளிட்டோரை சந்தித்து குடாநாட்டின் வன்முறைகள் மற்றும் போதைவஸ்து பாவனை அதிகரித்துள்ளமைக்கான காரணங்கள் தொடர்பில் விரிவாக ஆளுநர் கேட்டறிந்து கொண்டார்.
இதையடுத்து, யாழ். குடாநாட்டில் பாடசாலை அதிபர்கள், கல்வித் திணைக்களப் பணிப்பாளர்கள், கல்வி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடிய ஆளுநர், மாணவர்கள் மத்தியில் போதைவஸ்து பழக்கங்களை கட்டுப்படுத்த வேண்டிய வழிமுறைகள் தொடர்பிலும் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவதை தவிர்ப்பாற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாகவும் வினா எழுப்பினார்.
ஆளுநர் செயலகத்தில் நாளை (04) பாதுகாப்பு தரப்பினருடனான விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ள நிலையில், அதில் பேசவேண்டிய விடயங்கள் தொடர்பில் தகவலை பெற்றுக்கொள்ளும் கூட்டமாக இந்தக் கூட்டம் அமைந்ததாக, ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது.
இக்கூட்டத்தில் ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், இணைப்புச் செயலாளர் சுந்தரம் டிவகல்லாலா, உதவிச் செயலர் ஜே.எக்ஸ்.செல்வநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
33 minute ago
42 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
42 minute ago
53 minute ago