Editorial / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.தயா
ஓகஸ்ட் 31ஆம் திகதியன்று, நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 4 இந்திய மீனவர்களில் 2 இந்திய மீனவர்களுக்கு, 5 வருடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்ட கடூழிய சிறை நிபந்தனைகளுடன் மீனவர்களை விடுதலை செய்து, ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி ஏ.யூட்சன், இன்று உத்தரவிட்டார்.
அத்துடன், ஏனைய 2 மீனவர்களுக்கும் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஓகஸ்ட் 31ஆம் திகதியன்று, மண்டபத்தில் இருந்து வந்த 4 இந்திய மீனவர்கள், கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது திடீரென ஏற்ப்பட்ட சூறைகாற்று காரணமாக படகு பாறையில் மோதியது. இதன்ேபுது,. படகு பழுதாகி கரைக்கு ஏறியது. இதனால் நடுக்கடலில் தத்தளித்த நான்கு மீனவர்களும் இலங்கை கடற்படையிடம் உதவி கோரி தஞ்சம் அடைந்தனர்.
இதையடுத்து, அவர்களை மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றஞ்சாட்டி, இலங்கை கடற்படையினர் கைதுசெய்து, இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தினர்.
வழக்கை விசாரித்த ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி ஏ.யூட்சன் இரண்டு மீனவர்களையும் எதிர்காலங்களில் கடல் எல்லைக்குள் வர கூடாது என எச்சரித்து, 5 வருடத்துக்கு ஒத்திவைத்த கடூழிய சிறை நிபந்தனைகளுடன் மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
எஞ்சியுள்ள இருவரும் இலங்கையில் உள்ள மன்னார், யாழ்பாணம் பகுதிகளை சேர்ந்தவர்களாவர். இவர்கள் இறுதி கட்ட போரின் போது இந்தியாவுக்கு அகதிகளாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வருபவர்கள் என பொலிஸார் மன்றுரைத்தனர்.
இதையடுத்து, இவர்கள் மீன்பிடிக்க செல்ல தமிழக மீன் வளத்துறை அனுமதி அளிப்பதில்லை. ஆனால் எப்படி மீன்பிடிக்க வந்தீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்பியதுடன் இருவருக்கும் இலங்கை ரூபாய் பத்து ஆயிரம் அபராதம் விதித்து, இலங்கையில் உள்ள அவர்களது சொந்த ஊர்களில் தங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
விடுதலை செய்யப்பட்ட இரண்டு மீனவர்களும் மிரிஹானா முகாமில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் அடுத்த வாரம் விமானம் மூலம் தாயகம் திருப்பி அனுப்பபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
37 minute ago
7 hours ago
28 Mar 2026
28 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
7 hours ago
28 Mar 2026
28 Mar 2026