2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

’இந்தியாவின் நலனுக்காகவே கூட்டமைப்பு செயற்படுகிறது’

Editorial   / 2018 நவம்பர் 04 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்சன்

தமிழ் மக்களின் நலன் குறித்து தீர்மானம் எடுக்க வேண்டிய நேரத்தில், இந்தியா மற்றும் மேற்கு நாடுகளின் நலனைக் கருத்திற்கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் எடுக்கப்படும் தீர்மானங்களால், தமிழ் மக்களுக்கே பாதிப்பு ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், ஆகவே தமிழ் மக்களின் நலன் சார்ந்து செயற்பட வேண்டிய பொறுப்பும் கடமையும் கூட்டமைப்புக்கு இருக்கிறதென வலியுறுத்தினார்.

ஐனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு தமது ஆதரவை வழங்கப் போவதில்லை என்ற கூட்டமைப்பின் தீர்மானத்தைச் சாடிய கஜேந்திரன், தமிழ் மக்களின் நலன் சார்ந்த முடிவுகளை, கூட்டமைப்பு எடுப்பதில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

யாழ் ஊடக அமையத்தில், நேற்று (03) மாலை இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், நாட்டின் அரசியலில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அந்த நெருக்கடிகளை, சரியான முறையில் பயன்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழ்த் தரப்புகளுக்கு இருக்கின்றது என்றார்.

ஆனால், இந்த நிலைமைகளைச் சரியான முறையில் கையால, கூட்டமைப்பின் தவறியுள்ளனர் என்றும் தமிழ் மக்களின் நலன் சார்ந்து செயற்பட வேண்டிய தமிழ்த் தரப்பினர், குறிப்பாகக் கூட்டமைப்பினர், அதற்கு மாறாக இந்தியாவினதும் மேற்கு நாடுகளினதும், வல்லரசு நாடுகளினதும் நலன்களை முதன்மைப்படுத்தியே செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டினார்.

கடந்த ஆட்சியின் போது, தூக்குமேடைக்குக் கொண்டு செய்பவர்களைக் காப்பாற்றுவதற்காக, மைத்திரி - ரணில் அரசாங்கத்துக்கு, கூட்டமைப்பினர் உதவிக்கரம் நீட்டியிருந்தனர் என்றும் குற்றஞ்சாட்டிய கஜேந்திரன், அதனால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிட்டவில்லை என்றுச் சுட்டிக்காட்டினார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .