2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின் செயற்படுகிறமை அம்பலம்

Editorial   / 2022 பெப்ரவரி 10 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுகிறார்கள் என்பது அம்பலமாகியுள்ளதாக, வடக்கு மாகாண கடற்தொழிலாளர்கள் இணையத் தலைவர் என்.வி சுப்பிரமணியம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இழுவை  மடி தொடர்பில் விசேட பிரேரணை ஒன்று, தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்தது.

இந்நிலையில், இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர் அப்பிரேரணையை பாராளுமன்றத்தில் கொண்டு வர வேண்டாம் எனக் கூறியதற்கு இணங்க அந்த பிரேரணை கைவிடப்பட்டமை தொடர்பில், ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக வடக்கு மாகாண கடற்தொழிலாளர்கள் இணையத் தலைவர் மேலும் தெரிவிக்கையில், “தனது சுய புத்தியில் ஒரு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், தனது பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருந்தார்.

“ஆனால், அவர் ஒரு நாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு செயற்பட்டதன் காரணமாக, அந்த நாடு, அப்பிரேரணையை கொண்டு வர விரும்பவில்ல. அதிலிருந்து ஒன்றை நாங்கள் புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. அதாவது, அந்தக் கட்சியினர் யாருடைய நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுகின்றார்கள் என்று

“இனி வரும் காலங்களில் நாங்கள் யாரையும் நம்ப முடியாது. ஏனென்றால், ஒவ்வொருவரும் ஒவ்வொருவருடைய நிகழ்ச்சி நிரலில் செயற்படுகின்றார்கள். அவர்கள் மக்கள் மீது நம்பிக்கையாகவும் விசுவாசமாகவும் செய்பவர்களாக இருந்தால், எந்தவொரு நாட்டுக்கும் எந்தவொரு கட்சிக்கும் அடிபணியாது சுய புத்தியில் செய்யப்பட வேண்டும்

“பிரேரணை பாராளுமன்றத்தில் கொண்டு வரவில்லை. எனவே, அந்தக் கட்சியினர் இந்திய அரசின் நிகழ்ச்சிநிரலில் செயற்படுகிறார்கள் என்பதை உறுதியாக நம்ப வைக்கின்றது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .