2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இரு பொலிஸார் மீது உலக்கை தாக்குதல்

Gavitha   / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

உங்கள் வீட்டுக்கருகில் எவ்வாறு கசிப்பு போத்தல்கள் வந்தது என்று வினவிய இரண்டு பொலிஸாரை உலக்கையால் தாக்கிய சம்பவம், வடமராட்சி, துன்னாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்றுள்ளது.

துன்னாலைப் பகுதியில் கசிப்பு காய்ச்சும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருபவர்களை கைது செய்வதற்காக, நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸார், குறித்த பகுதிக்குச் சென்றுள்ளனர்.

அங்கிருந்த வீடொன்றுக்கு அருகிலிருந்து 2 போத்தல் கசிப்பை மீட்ட பொலிஸார், வீட்டுக்காரர்களை அழைத்து இந்தக் கசிப்பு எவ்வாறு உங்கள் வீட்டுக்கு அருகில் வந்தது என்று வினவியுள்ளனர்.

இந்தக் கேள்வியைக் கேட்டு ஆத்திரங்கொண்ட வீட்டுக்காரர், இரு பொலிஸார் மீதும் உலக்கையால் தாக்கியுள்ளதாக தெரிவித்த நெல்லியடி பொலிஸார், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .