Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 21 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்
பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்களால், நேற்று நினைவு கூரப்பட்டது.
யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்களான நடராஜா கஜன் மற்றும் விஜயகுமார் சுலக்சன் ஆகிய இரு மாணவர்களும் கடந்த 2016ஆம் ஆண்டு நள்ளிரவு வேளை காங்கேசன்துறை வீதி ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டு இருந்த வேளை, கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் நின்ற பொலிஸார், மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில், மாணவர்கள் உயிரிழந்து இருந்தனர்.
படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதி கோரி யாழ். பல்கலைகழக மாணவர்கள் போராட்டம் நடத்திய போது , மாணவர்களை அழைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா சந்தித்து, குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் விரைவான விசாரணைகள் நடத்தப்பட்டு ஆறு மாத காலத்துக்குள் குற்றப்பகிர்வு பத்திரம் யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும் என உறுதி அளித்திருந்தார்.
ஆனால், தற்போது இரண்டு வருடங்களை கடந்த நிலையிலும் இதுவரை சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றபகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை.
அதேவேளை குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் ஐந்து பொலிசார் மீது குற்றம் சுமத்தப்பட்டு யாழ்.நீதிவான் நீதிமன்றில் சுருக்க முறையற்ற விசாரணைகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தற்போது ஐந்து பொலிஸாரில் மூன்று பொலிஸார் வழக்கில் இருந்து முற்றாக நீக்கபப்ட்டு அரச தரப்பு சாட்சியமாக மாற்றப்பட்டு உள்ளனர். ஏனைய இருவருக்கும் எதிராகவே குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது என்பது குரிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .