2025 மே 05, திங்கட்கிழமை

இராணுவ வீரரின் சடலம் மீட்பு

Niroshini   / 2021 மே 28 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன், என்.ராஜ்

பலாலி இராணுவத் தலைமையகத்தில், நேற்று  (27) மாலை இராணுவ வீரர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கண்டி - வத்தேகம பகுதியைச்  இரண்டு பிள்ளைகளின் தந்தையான  ரஞ்சுல பண்டார (36 வயது) என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் வசிக்கும் பெண் ஒருவருடன் குறித்த இராணுவ வீரர் தொடர்பில் இருந்ததாகவும், அந்தப் பெண்  தன்னுடன் தொலைபேசியில் நீண்ட காலமாக பேசாத நிலையில் ஏற்பட்ட மன விரக்தியில்,  பலாலி தலைமையாக விகாரைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X