Freelancer / 2022 ஜூலை 03 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்சன் வினோத்
யாழ். மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் உள்ள லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிறைவடைந்து விட்டதாக இராணுவத்தினர் தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக அத்தியாவசிய சேவையினருக்கும், டோக்கன் விநியோகிக்கப்பட்ட பொது மக்களுக்கும் என இரண்டு வரிசைகளில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றது.
இந்த நிலையில் மாலை 5:30 மணியளவில் எரிபொருள் நிறைவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து பொதுமக்களும் அத்தியாவசிய சேவைப்பிரிவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ். மாவட்ட பொலிஸ் நிலைய தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு விரைந்து வீதியின் போக்குவரத்தை சுமூகமான நிலைக்கு கொண்டு வர முயன்றாலும் பொதுமக்கள் குழப்பமான சூழ்நிலையையே எதிர்கொண்டனர். (R)
3 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
07 Mar 2026
07 Mar 2026