2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

இரு மீனவர்களைக் காணவில்லை

Editorial   / 2018 ஏப்ரல் 11 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா

காரைநகரிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இருவரை கடந்த திங்கட்கிழமை (09) முதல் காணவில்லை என படகு உரிமையாளரால் இன்று (11) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.

நவந்துறையைச் சேர்ந்த தம்பி மற்றும் முல்லைத்தீவுவைச் சேர்ந்த பவுன் என அழைக்கப்படும் இருவருமே காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை மதியம் 1 மணிக்கு காரைநகர் கடற்கரையில் இருந்து றோலர் படகில் இருவரும் கடற்றொழிலுக்குச் சென்றுள்ளனர்.

படகின்  இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் நயினாதீவுக் கடல் பகுதியில் தரித்து நிற்பதாக படகு உரிமையாளக்கு இருவரும் அறிவித்துள்ளனர். இதனையடுத்து படகு உரிமையாளர் அப்பகுதிக்கு சென்ற பார்த்தபோது, குறித்த இடத்தில் இருவரும் தென்படவில்லை. என படகு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .