2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

இலஞ்சம் ஊழலில் ஈடுபட்ட கான்ஸ்டபிளுக்கு இடமாற்றம்

Niroshini   / 2021 டிசெம்பர் 26 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு, வெள்ளிக்கிழமை (24), திடீர் விஜயம் மேற்கொண்ட பிரதி பொலிஸ் மாஅதிபர், பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ந்து கொண்டார்.  

அத்துடன், கடமையை சரியான முறையில் செய்யாமை, பொதுமக்களிடம் வற்புறுத்தி பணம் பெறுகின்றமை, பொறுப்பு அதிகாரிகளுக்கு பணத்தை தரகராக நின்று பெற்றுக்கொடுக்கும் சம்பவங்கள் தொடர்பில் அறிந்துகொண்டார்.

இதையடுத்து, அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில்  கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள்; ஒருவர் உடனடியாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் பிரதி பொலிஸ்  அதிபரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தனர்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு பல தடவைகள் வேறு பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டும், மீண்டும் இடமாற்றத்தை இரத்து செய்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் பெற்று வந்திருந்தார். 

இவரின் செயற்பாட்டால் பாதிக்கப்பட்ட பொதுமக்களும பல்வேறு உயர் அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்திருந்தனர்.

அதேபோல், இந்த விடயம் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த லியனகே கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து, குறித்த நபர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .