Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2021 ஜூலை 18 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
இலண்டனில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய நிலையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த வைத்தியர் ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அச்சுவேலி - தோப்பு பகுதியை சேர்ந்த சிற்றப்பலம் இராசலிங்கம் (வயது-80) என்பவரே, இவ்வாறு உயிரிந்தவர் ஆவார்.
இவர், இலண்டனில் இருந்து கடந்த ஜூன் 29ஆம் திகதி அச்சுவேலி திரும்பிய நிலையில், மாரடைப்பு காரணமாக, கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் உயிரிழந்துள்ளார். அவர் முன்னாள் அச்சுவேலி வைத்தியசாலை அத்தியட்சகர் என்று உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. அவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், கொரோனா தொற்றுள்ளதாக நேற்று (17) இரவு அறிக்கையிடப்பட்டுள்ளது.
அதனால் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் அவரது சடலம் சுகாதார நடைமுறைகளின் கீழ் மின்தகனம் செய்யப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago