2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

இளவாலையில் தந்தை குழந்தையுடன் தலைமறைவு

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 21 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன், எம். றொசாந்த்

யாழ்ப்பாணம் இளவாலையில் ஐந்து மாதக் குழந்தையுடன் கணவன் தலைமறைவாகியுள்ளதாக மனைவி இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

கணவன், மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கணவன் பிள்ளையை துாக்கிச் சென்ற சம்பவம் தொடர்பில் ஏற்கெனவே முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனடிப்படையில் பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதடையடுத்து கணவனை குழந்தையோடு நீதிமன்றில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டது.

எனினும், பிள்ளையின்றி நீதிமன்றில் முன்னிலையான நிலையில், ஐந்து மாத பாலூட்டும் குழந்தை என்பதற்கிணங்க தாயாரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் பணித்தது.

இந்நிலையில், குழந்தையை தாயாரிடம் ஒப்படைக்காது கணவர் குழந்தையோடு நேற்று முன்தினம் தலைமறைவாகியுள்ளார்.

இதையடுத்து மனைவி இளவாலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதோடு தாயார் குழந்தையை பல இடங்களிலும் தேடி அலைகின்றார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .