Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜனவரி 12 , பி.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பு.கஜிந்தன்
ஈழ நிசான் அறக்கடையால் 725 மாணவர்களுக்கு, 7 இலட்சத்து 75ஆயிரம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் ஞாயிற்றுக்கிழமை (12) வழங்கி வைக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கில் வைத்து இவ்வாறு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அதனை தொடர்ந்து மங்கள விளக்கு ஏற்றி வைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது. தொடர்ந்து இறை வணக்கம், வரவேற்புரை, தலைமையுரை விருந்தினர்கள் உரை என்பன இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
ஈழ நிசான் அறக்கட்டளையின் செயலாளர் பு.கிரிதரன் தலைமை தாங்கிய இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனும், சிறப்பு விருந்தினராக தீவக வலயக் கல்விப் பணிப்பாளரும், கௌரவ விருந்தினராக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தின் கீழ் உள்ள தீவக வலய பொலிஸ் பொறுப்பதிகாரி சேந்தனும் கலந்து சிறப்பித்ததுடன், மாணவர்கள், பெற்றோர், சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
5 minute ago
16 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
16 minute ago
29 minute ago