Janu / 2025 டிசெம்பர் 09 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நன்னீர் திட்ட நிறுவனத்திடம் இருந்து அன்பளிப்பாக அனர்த்த உதவிக்கென பெற்றுக் கொண்ட இரு படகுகளை சமாசம் குத்தகைக்கு கொடுத்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
வடமராட்சி கிழக்கு தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தால் வடமராட்சி கிழக்கு சமாசத்திற்கு உட்பட்ட அனைத்து துணைச் சங்கங்களுக்கும் இலவசமாக இயந்திரத்துடன் இரு படகுகள் வழங்கப்பட்டன
டித்வா புயல் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி பெரும் உயிரிழப்பை நிகழ்த்திய போது வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்க சமாசத்திற்கு அனர்த்த உதவிக்கு கொடுத்த இரு படகுகள் தொடர்பில் மக்களால் ஆராயப்பட்டது.
அனர்த்த நிலைமையின் போது அவசர உதவிக்கு கொடுத்த இரு படகுகளையும் குத்தகை அடிப்படையில் தனது சமாச நிர்வாக உறுப்பினர்களுக்கு கொடுத்துள்ளமை தெரிய வந்துள்ளது
வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்க சமாசத்தின் குறித்த தன்னிச்சையானதும்,மக்கள் மீது அக்கறை இல்லாத செயற்பாட்டிற்கும் அப்பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
பூ.லின்ரன்

6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
8 hours ago