2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

உதவித்தொகை வழங்கியவர் கைது

Niroshini   / 2021 செப்டெம்பர் 06 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவடி பகுதியில், ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், மக்களை ஒன்றுதிரட்டி, உதவித்தொகை வழங்கிய குற்றச்சாட்டில், நெல்லியடி பொலிஸார் மூவரை, இன்று (06) கைதுசெய்துள்ளனர்.

வடமராட்சி பகுதியில் வாழும் வறிய மக்களுக்கு உதவி தொகையாக, தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் ஒருவர் உதவி தொகை வழங்கியுள்ளார்.

உதவி தொகை வழங்கப்படுவதாக அறிந்த அப்பகுதி மக்கள் பலரும், அவ்விடத்தில் ஒன்றுகூடினர்.

அது தொடர்பில் தகவல் அறிந்து, ஸ்தலத்துக்கு விரைந்த நெல்லியடி பொலிஸார், உதவி தொகை பெற வந்த மக்களை, அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.

அதை தொடர்ந்து, உதவி தொகை வழங்கியவர், அதற்கான ஏற்பாடுகளை செய்தவர் உள்ளிட்ட மூவரை, பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த நபர், ஒருவருக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் சுமார் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு சுமார் 10 இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை வழங்கியுள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X