2025 மே 15, வியாழக்கிழமை

‘உயிரிருக்கும் வரை தமிழ் மக்களுக்குச் சேவையாற்றுவேன்’

Editorial   / 2020 ஜனவரி 30 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

உயிரிருக்கும் வரை எந்தவிதத்திலும் தமிழ் மக்களுக்குச் சேவையாற்ற தான் தயாராக இருப்பதாக, முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

இந்து - பௌத்த கலாசார பேரவையில், இரண்டாம் மொழி கற்றல் செயற்பாடுகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, யாழ்பாணம் இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில், இன்று (30) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உருவாக்கிய ஆளுநர்களில், “சிறந்த ஆளுநர்” எனும் பட்டம் என் பின்னால் இன்னும் இருப்பதாகவும் தெரிவித்தார்.

தனக்கு இருப்பது ஓர் ஆன்மா, ஓர் உயிர், ஓர் உடலெனத் தெரிவித்த சுரேன் ராகவன், இவை மூன்றும் இருக்கும் வரை தமிழ் மக்களுக்குச் சேவை செய்வதற்கு எந்தவிதத்திலும் தான் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

அதற்காக அரசியலில்  இறங்கப்போகின்றேனா அல்லது மீண்டும் ஆளுநராக வரப்போகின்றீர்களா எனும் கேள்வியைப் பலரும் கேட்கின்றனரெனவும், அவர் தெரிவித்தார்.

ஆனாலும், தமிழ் மக்களுக்கு எந்தவகையிலும் தான் உதவி செய்வதற்கு தயாராகவே இருப்பதாகவும் அதனடிப்படையில் தமிழ் மக்களுக்கான தனது சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவும், சுரேன் ராகவன் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .