2025 மே 15, வியாழக்கிழமை

உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கையிலும் படைப் புழு தாக்கம்

Editorial   / 2020 ஜனவரி 30 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், சோளப் பயிர்ச்செய்கையைத் தொடர்ந்து, தற்போது கிழங்கு பயிர்ச்செய்கையிலும் படைப் புழுவின் தாக்கம் இனங்காணப்பட்டுள்ளது.

அச்சுவேலி - செல்வநாயகபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட உருளைக்கிழங்குப் பயிர்ச்​செய்கையில், நேற்று (29), படைப் புழுகளின் தாக்கம் இனங்காணப்பட்டுள்ளது. 

இவற்றை கட்டுப்படுத்தும் முகமாக, யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதி விவசாயப் பணிப்பாளர், அலுவலக விவசாய போதனா ஆசிரியர்கள் ஆகியோர், இன்று (30) குறித்த பகுதிகளுக்குச் சென்று ஆய்வுகளில் ஈடுபட்டனர்.

இதன் போது, பாவிக்க வேண்டிய மருந்து முறைகள், ஆலோசனைகளை வழங்கினர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், தற்போது 127 ஹெக்டயர் பரப்பில் உருளைக்கிழங்கு பயிர்ச் மேற்கொள்ளப்படுகின்றது. எனவே, படைப் புழுவின்  தாக்கம் இனங்காணப்பட்டுள்ளதால், விவசாயிகள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும், விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் அறிவுறுத்தினர்.

பயிர்கள் வாடி காணப்பட்டால், உடனடியாக மண்ணைக் கிளறிப் பார்த்து, படைப் பழுவின் தாக்கத்தை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும், உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .