2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

“உள்ளகப் பொறிமுறையை நிராகரிப்போம்”

Mayu   / 2024 டிசெம்பர் 08 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் உள்ளகப் பொறிமுறையை நிராகரிப்பதோடு, தொடர்ந்தும் சர்வதேச விசா ரணையை வலியுறுத்துகின்றோம் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர்.

யாழ் ஊடக அமையத்தில் சனிக் கிழமை (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட் டோரின் உறவினர்களின் சங்கத்தினரால் ஊடக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட் டது. அவ்வறிக்கையில்,

"நாம் ஒரு தேசிய இனம். ஆனால் தொன்று தொட்டு சிறுபான்மையினம் என்ற பதத் துக்குள் திட்டமிட்டு தள்ளப்பட்டுள்ளது எம். தமிழினம். இன்றும் தமது பிள்ளைகளையும், கணவன்மார்களையும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பரம்பரையில் முதல் வரி சையில், மனம் தளர்ந்து வெந்து கொண்டி ருக்கும் உறவுகளாக, வடக்கு/கிழக்கில் ஏங் கிக்கொண்டிருக்கும் தமிழினமாக வாழ்ந்து வருகின்றோம்.

 

இன்று எமது எட்டு மாவட்டத்திலுமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் எண்ணிக்கை 18,817 பேர் ஆவர். அதுமட்டு மல்லாமல், 2009இல் முள்ளிவாய்க்காவலில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது எமது மக்கள் மீது பாரிய இனவழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 1,46,679 பேரை பலி யெடுத்துள்ளது. நாம் எமது உறவுகளை இறுதி யக்கத்தில் இழந்து தவிக்கின்றோம்.

இன்று எமது எட்டு மாவட்டத்திலுமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் எண்ணிக்கை 18,817 பேர் ஆவர். அதுமட்டு மல்லாமல், 2009இல் முள்ளிவாய்க்காவலில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது எமது மக்கள் மீது பாரிய இனவழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 1,46,679 பேரை பலி யெடுத்துள்ளது. நாம் எமது உறவுகளை இறுதி யுத்தத்தில் இழந்து தவிக்கின்றோம்.

காணாமல் போனோர் அலுவலகம் ஒன்றை 2015 ஆம் ஆண்டு நிறுவினார்கள். இதில் எமக்கு நம்பிக்கை இல்லை. காரணம் நாம் கொடுத்த ஆவணங்களுக்கு இன்று வரை பதில் இல்லை மற்றும்  வலிந்து காணாமல் ஆக்கப் பட்ட எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவு களின் தாய்மார்களுக்கு ஒரு லட்சம் அல்லது ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் வழங் கியும் மரணச் சான்றிதழ் கொடுத்தும் நீதி வேண்டிய போராட்டத்தை முடித்துவிடத் துடிக்கிறது இலங்கை அரசு. அதுமட்டுமல்ல, இந்த ஓஎம்பி வடக்கு கிழக்கு மக்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளா கிய எமது பிரச்சினைகளை ஒரு பொருட் டாகப் பார்க்கவில்லை என்பதை நாம் இலங்கை அரசின் செயற்பாடுகளில் காணக் கூடியதாக இருக்கின்றது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக் கவி உரையிலேயே தமிழருக்கான இன அடை 55 யாளம் மறுக்கப்பட்டுள்ளது. எல்லோரும் ஒட்டுமொத்த இலங்கை மக்கள் என்று அவர் கூறியுள்ளார். நாம் ஒரு தமிழ் தேசிய இனம் என மீள வலியுறுத்துவதுடன் உள்நாட்டின் எந்தவொரு பொறி முறையையும் நாம் என ஏற்கப்போவதில்லை வலியுறுத்துவதுடன் நாம் சர்வதேச நீதிப் பொறிமுறை ஊடாக நீதி வேண்டும் என வலியுறுத்துகின்றோம்" என்றும் அவ​ர்கள் தெரிவித்துள்ளனர்.

நிதர்ஷன் வினோத்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X