2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

எரிபொருள் பற்றாக்குறை; கடற்றொழில் பாதிப்பு

Princiya Dixci   / 2022 மார்ச் 13 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

நாட்டில் நிலவுகின்ற எரிபொருள் பற்றாக்குறை காரணமாக, பெருமளவான தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இரணைமாதா நகர், பள்ளிக்குடா, நாச்சிக்குடா, கிராஞ்சி, வேரவில் மற்றும் வலைப்பாடு  போன்ற பகுதிகளில் கடற் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தமது தொழிலை நடவடிக்கைகளுக்காக சென்று வருவதற்குத்  தேவையான எரிபொருள் இல்லாத நிலையில் தாங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிகைகளில் காத்திருந்தும் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருளை  மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிவதாகவும் அவர்கள் ​ தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரம் குறைந்த அளவு எரிபொருளைக் கொண்டு மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர், எரிபொருள் தீர்ந்து விட்டதால், குறித்த படகு நீண்ட நேரத்தின் பின்னர் இரணைதீவு பகுதியில் கரையொதுங்கிய பின்னர் சக தொழிலாளர்களால் காப்பாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X