Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2022 ஏப்ரல் 07 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவள பாதுகாப்புத் திணைக்களத்தால் காணிகள் எல்லைப்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்படும் எல்லைக்கல் நடுவதை நிறுத்தி வைப்பதாக தீர்மானம் எட்டப்பட்ட போதும், அதன் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்டச் செயலாளர் க.விமலநாதனின் ஏற்பாட்டில், வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான காதர் மஸ்தான் ஆகியோரின் இணைத்தலைமையில் மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
இதன்போதே, மேற்படி தீர்மானம் ஏட்டப்பட்டிருந்தது. எனினும், தற்போதும் எல்லைக்கல் இடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞசாட்டியுள்ளனர்.
புதுக்குடியிருப்பு, மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் ஆகிய பகுதிகளில் ஒதுக்கப்பட்ட வனப் பிரதேசங்களாக எல்லையிடப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, யுத்தகாலத்தில் கைவிடப்பட்ட பயிர்ச்செய்கை நிலங்கள் அதிகளவிலே இவ்வாறு எல்லையிடப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் எல்லையிடப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அத்துடன், மாந்தைகிழக்கு பிரதேசத்தில் வனவளத் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் கு மற்றும் றிப்பிட்ட சில கிராம அலுவலர்களின் முழுமையான ஒத்துழைப்புக்களுடன் பெருந்தொகையான காடுகள் அழிக்கப்பட்டு, காணிகள் ஆக்கிரமிக்கப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மாந்தை கிழக்கில் 3,000க்கும் மேற்பட்டவர்கள் பயிர்ச்செய்கை காணிகளின்றியும் தொழில் வாய்ப்பின்றியும் வாழும் நிலையில், வனவளத் திணைக்களத்தால் இவ்வாறு முன்மொழியப்பட்ட வனப் பிரதேசங்கள் என்ற பெயர் பலகைகள் இடப்பட்டுள்ளன.
6 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago