2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

Kogilavani   / 2017 மார்ச் 10 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன், கே.கண்ணன்

வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்துக்கு அருகில் வைத்து, முச்சக்கர வண்டியில் வைத்து கேரளா கஞ்சா விற்பனையில்  ஈடுபட்டுக் கொண்டிருந்த மூவரை, வவுனியா மாவட்ட  உதவி மதுவரி  ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள, வியாழக்கிழமை மாலை கைதுசெய்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, வவுனியா மாவட்ட  உதவி மதுவரி  ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள்,  சம்பவ இடத்துக்கு விரைந்ததுடன், கேரளா கஞ்சாவுடன் மேற்படி இருவரை கைதுசெய்ததுடன், அவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய மற்றுமொருவரையும்; கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபர்களை, வவுனியா மாவட்ட நீதவான் நிதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .