2025 மே 24, சனிக்கிழமை

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது

Editorial   / 2022 பெப்ரவரி 23 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை, கட்டுவான் பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்ட பொலிஸார், அங்கிருந்த ஒருவரை கைது செய்ததுடன், ஆயிரம் லீட்டர் கோடா மற்றும் 20 லீட்டர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்கள் என்பவற்றை மீட்டுள்ளனர்.

தெல்லிப்பளை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இடத்தை பொலிஸாருடன் இணைந்து நேற்று (22) முற்றுகையிட்டனர்.

கைது செய்யப்பட்ட நபரை, தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், மீட்கப்பட்ட பொருள்களை சான்று பொருள்களாக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X