Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 மார்ச் 08 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கும் யாழ் மாவட்ட செயலர் என்.வேதநாயகன் இம்முறை திருவிழாவுக்கு இலங்கையிலிருந்து 7 ஆயிரம் வரையான பக்தர்களும் இந்தியாவிலிருந்து 2 ஆயிரத்து 200 பேர் வரையிலும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இம்மாதம் 15, 16 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கான முன்னேற்பாட்டு இறுதிக் கூட்டம் மாவட்ட செயலர் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் இன்று (08) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு மாவட்டச் செயலர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மேற்படி ஆலய வருடாந்த திருவிழாவுக்கான முதலாவது ஏற்பாட்டுக் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் திகதி நடைபெற்றிருந்தது. இந் நிலையில் அக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அல்லது பணிகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடிவெடுப்பதுக்காக இறுதிக் கூட்டமாக இந்தக் கூட்டம் அமைந்திருக்கின்றது.
குறிப்பாக கடந்த கூட்டத்திற்கமைய முன்னெடுக்கப்பட்ட பணிகளின் முன்னேற்றங்கள் மற்றும் தொடர்பில் ஆராயப்பட்டிருந்தது. இதற்கமைய மேற்ப ஆலய உற்சவத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இதில் மிக முக்கியமாக இலங்கையைச் சேர்ந்த 7 ஆயிரம் வரையான பக்தர்களும் இந்தியாவிலிருந்து 2 ஆயிரத்து 200 பேர் வரையிலும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதி அதிகாலை 3.30 மணிமுதல் யாழ்ப்பாண மத்திய பஸ் நிலையத்திலிருந்து பஸ்கள் குறிகட்டுவானை நோக்கிப் புறப்படும். அந்தச் சேவைகள் காலை 10.30 மணிவரை தொடர்ந்து நடைபெறும். அதேபோன்று 16 ஆம் திகதி காலை முதல் குறிகட்டுவானிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான விசேட பஸ் சேவைகள் நடாத்தப்படும்.
மேலும் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களின் நலன் மற்றும் வசதி கருதி கூடுதலான பஸ் சேவைகள் ஒழுங்குபடுத்தப்படுவதோடு குறிகட்டுவானிலும் நீர் மலசல கூட வசதிகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.
கடந்த முறை போன்று இம்முறையும் கூடுதலான பக்தர்கள் வருவார்களாக இருந்தால் போக்குவரத்து பிரச்சினை உள்ளது. எங்களிடம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தான் படகுச் சேவைகள் இருக்கின்றன. ஆகவே ஆலயத்திற்கு வரவிருக்கின்றவர்கள் 15 ஆம் திகதி காலையிலேயே குறிகட்டுவானுக்கு வந்து படகுகில் ஏறிச் செல்லுமாறு கோருகின்றோம் என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
28 minute ago
54 minute ago