Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Editorial / 2022 பெப்ரவரி 22 , பி.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ராஜ்
கச்சதீவு அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவம் இம்முறை இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.
கச்சதீவு உற்சவம் தொடர்பில் இன்று (22) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “2022ஆம் ஆண்டுக்குரிய கச்சதீவு அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா, எதிர்வரும் மார்ச் மாதம் 11ஆம் 12ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
“இந்த உற்சவத்தில் பக்தர்கள் கலந்துகொள்வதில் ஒரு தெளிவின்மை காணப்பட்டது. ஏனென்றால் தற்போது நாட்டில் உள்ள கொரோனா தொற்று நிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டிருந்தது
“எனினும், தற்போது இலங்கையில் இருந்து 50 பக்தர்களும் தமிழ்நாட்டில் இருந்து 50 பக்தர்கள் மாத்திரம் இம்முறை உற்சவத்தில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“எனவே, இதற்குரிய மேலதிக நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்கின்றோம். மிகவும் இறுக்கமான சுகாதார அமைச்சால் விதிக்கப்பட்டுள்ள வழி முறைகளுக்கு அமைய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, இம்முறை உற்சவமானது இடம்பெறவுள்ளது.
“அதேவேளை, இந்த உற்சவ கட்டுப்பாடுகள் குறித்து மிக விரைவில் அறிவிக்கவுள்ளோம். அத்தோடு, பங்கு கொள்பவர்களைத் தீர்மானிக்கும் பொறுப்பு யாழ். ஆயர் தலைமையிலான பங்கு தந்தைகளிடம் விடப்பட்டுள்ளது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago