Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 24, சனிக்கிழமை
Freelancer / 2022 பெப்ரவரி 22 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 100 யாத்திரிகர்களுக்கு கச்சதீவு அந்தோனியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
எதிர்வரும் மார்ச் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் கச்சதீவு அந்தோனியார் தேவாலய திருவிழா நடைபெறவுள்ளது.
ஏலவே, குறித்த திருவிழாவுக்கு 500 பக்தர்களை அனுமதிப்பதாக யாழ். மாவட்ட ரீதியாக தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
எனினும், யாத்திரிகர்கள் எவரையும் அனுமதிப்பதில்லை எனவும், அருட்தந்தைகளின் பங்கேற்புடன் மாத்திரம் திருவிழாவை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும், இது குறித்த உத்தரவை அமைச்சரவைக்கு ஜனாதிபதி தெரிவித்தார் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அண்மையில் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், தற்போது, இலங்கை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தலா 50 யாத்திரிகர்களுக்கு மாத்திரம் கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என யாழ். மாவட்ட அரச அதிபர் மேலும் கூறினார். (K)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
7 hours ago
9 hours ago