2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

கஞ்சா கடத்திய மூவர் கைது

Niroshini   / 2021 ஜூலை 26 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

தொண்டைமானாறு கடற்பரப்பில், படகு ஒன்றில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மூவர், இன்று (26) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 6 சாக்குகளில் பொதியிடப்பட்ட சுமார் 250 கிலோ கிராம் கஞ்சா  கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு படகு ஒன்றில் கஞ்சா கடத்தி வரப்பட்ட போதே  அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் வளலாயைச் சேர்ந்த 22, 30 மற்றும் 36 வயதுடையவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X