Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 நவம்பர் 06 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-குணசேகரன் சுரேன்
யாழ்ப்பாணத்தில், கணவாயின் விலையானது வெகுவாக வீழ்ச்சியடைந்து தற்போது 1 கிலோ கிராம் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
கடந்த மாதத்தில் 650 ரூபாய் தொடக்கம் 700 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்த கணவாயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கணவாய் சீசன் தற்போது ஆரம்பித்துள்ளமையால், மீனவர்களுக்கு கணவாய் வெகுவாகப் பிடிபடுவதால் இந்த விலை வீழ்ச்சி ஏற்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் முக்கிய சந்தைகளான சின்னக்கடை, பண்ணை, நாவாந்துறை, காக்கைதீவு ஆகிய இடங்களில் கணவாயின் விலை வீழ்ச்சியடைந்து காணப்படுகின்றது.
கடலில் நன்னீர் கலப்பு ஏற்படும் போது, (மழை காலங்களில்) இறால், கணவாய் ஆகியவற்றின் உற்பத்திகள் அதிகரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
20 minute ago