2025 ஜூலை 10, வியாழக்கிழமை

கத்தோலிக்கத் திருச்சபையினர் நாட்டில் அமைதி நிலவ வேண்டி விசேட வழிபாடு

Editorial   / 2018 டிசெம்பர் 06 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஜெகநாதன், டி.விஜித்தா

 

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிநிலை தீர்க்கப்பட்டு, அமைதி ஏற்பட வேண்டுமெனப் பிரார்த்தித்து, யாழ்ப்பாணம் - மரியன்னை பேராலயத்தில், சிறப்பு நற்கருணை ஆராதனை நடைபெற்றது.

அமலமரி தியாகிகள் சபையின் வடமாகாண முதல்வர் அருட்தந்தை எட்வின் வசந்தராஜ் தலைமையில், ​இன்று முற்பகல் 10 மணிக்கு, இந்த ஆராதனை இடம்பெற்றது.

“நாட்டு மக்களை வழிப்படுத்த வேண்டிய அரசியல் தலைவர்கள், தமது சுயநலன்களின் அடிப்படையில் செயற்படுகின்றனர். அவர்களின் இந்தச் செயற்பாடுகளால் மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள்.

“மனிதர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த நெருக்கடி நிலைக்குத் தீர்வைக் காண்பது இயலாத காரியம். அதனால், தலைவர்களுக்கு எல்லாம் தலைவரான எல்லாம் வல்ல இறைவனிடம் தான் அமைதி வேண்டிப் பிரார்த்திக்க வேண்டும்.

“நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலையைத் தீர்ப்பதற்கு, நீதித்துறை, பக்கச்சார்பின்றி தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் இறைவனிடம் வேண்டி நிற்கின்றோம்” என, தனது ஆராதனை உரையில், அருட்தந்தை எட்வின் வசந்தராஜா பிராத்தித்தார்.

நாட்டில் அமைதி வேண்டி, கத்தோலிக்கத் திருச்சபையின் மறை மாவட்டங்கள் அனைத்திலும், நேற்று முற்பகல் 10 மணி தொடக்கம் 12 மணிவரை, இந்த நற்கருணை ஆராதனை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .