2025 டிசெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நாவலர் குருபூஜை

Janu   / 2025 டிசெம்பர் 11 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் புதன்கிழமை (10) அன்று நாவலர் குருபூஜை இடம்பெற்றது.

கலாசாலை ரதிலஷ்மி மண்டபத்தில் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதலாவதாக கலாசாலையில் எழுந்தருளி உள்ள நாவலர் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி வணக்கம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் அதிதி பேச்சாளராக சிவத்திரு விஷ்ணுகுமார் விஷ்ணுயன் கலந்து கொண்டார். அதிதிக்கான அறிமுக உரையை இந்து மன்ற காப்பாளர் கு.பாலசண்முகன் ஆற்றினார். கலாசாலை அதிபர் நிறைவுரை ஆற்றினார்.

அதிதி பேச்சாளரை, முகாமைத்துவ குழுவினரால் பொன்னாடை போர்தியும் மாலை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டார்.

 பு.கஜிந்தன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X